உலக வங்கி
May 1983: Prince
George's County, Maryland,USA:
என்
Brother in law:ஏய்
, நாளைக்கு என்ன Program உனக்கு?
WORLD BANK, IMF போகலாம்னு நினைக்கிறேன்
Ok, எங்க இருக்குன்னு
தெரியுமோல்யோ? சரி, அப்ப கார்த்தால 6 மணிக்கெல்லாம் ready ஆயிடு. உன்னை Metro Rail station ல இறக்கிவிட்டுட்டு நான்
அப்படியே Motorola போறேன்.
மனதிற்குள்
ஏக உற்சாகம்.
1972ல் Professor Jagaraj தினந்தோறும் 'Banking, Currency, International Trade, and
Public Finance' வகுப்பை
'The Miiiiiiiiighty Dollar' என்றுதான் ஆரம்பிப்பார். Syllabus என்னவென்று கவலைப்படாமல் international tradeல் என்னென்ன நடக்கிறது
என்பதை அந்த 45 நிமிட வகுப்புகளில்
தன்னையே மறந்த நிலையில் விரிவாக்கம் செய்வார்.
உலகப்
போர், ஐ.நா, Bretton Woods Conference, IMFன் ஸ்தாபிதம், Gold Standardன் வீழ்ச்சி, Sterling Poundன் தளர்ச்சி, US dollar எப்படி Mighty Dollar ஆனது என்பதின் பரிணாம
வளர்ச்சி என பல விக்ஷயங்களில் சஞ்சரித்து அன்றன்றைய தினங்களில் உலகப் பொருளாதார
நிலமை என்ன என்பதனை கோடிட்டுக் காட்டிவிட்டு தன் அன்றைய lectureஐ, Japanese Yen எப்படி அந்த mighty dollarஐ ஆட்டம் காண வைக்கிறது என ஆரம்பித்து, முடித்துக் கொள்வார்.
அவர்
Monetary theoryயும், practiceஉம் சுவைபட கற்பித்ததில்
நான் Adarsh Vidyalaya வாசலில் என் நண்பனுடன்
நின்று sight அடிப்பதை அறவே தவிர்க்க
வேண்டியதாகிவிட்டது.
Purchasing power
parity theoryயும், Bretton Woods conferenceல் வரையறுக்கப்பட்ட IMF ஸ்தாபிதம், அதற்கான
கோடபாட்டுகள், Balance of Payments,
GNP கணக்கீடுகள், Lender of Last Resort..Central Banks Roles,
Foreign Exchange regulations, money laundering என எனக்குப்பிடித்த பல Macro Economics concepts/theory அனைத்தையும்
அசைபோட்டுக்கொண்டேன். IMF visitற்காக Finance Secretary அளவிற்கு ஏக preparation. விரல் நுனியில் statstics.
அடுத்த
நாள் காலை 6 மணிக்கு காபி
குடித்துவிட்டு, மானசீகமாக விபூதி
இட்டுக்கொண்டு, கையில் புது மணம்கமிழும் MBA degreeயுடன் அண்ணன் கோயில்
ஶ்ரீநிவாசரையும், அலர்மேல்
மங்கைத்தாயாரையும் நினைவு கூர்ந்து பாஸ்கருடன் அவரது காரில் பயணிக்க ஆயத்தமானேன்.
IMF 04:
Metro stationல் இறக்கிவிட்டார். Foggy Bottom station என நினைக்கிறேன். வானளாவிய
பல Federal கட்டிடங்கள் தமக்கே
உரித்தான பிரும்மாண்டமும், கண்டிப்பும்
பறைசாற்றிக்கொண்டு பயமுறுத்திக்கொண்டிருந்தன. தங்கமுலாம்பூசிய
பெயர்ப்பலகையுடன் நெருங்க விடாத , நட்பு பாராட்டாத அந்த concrete கட்டிடத்தை நோக்கி நடக்க
ஆரம்பித்தேன். நடை பின்னியது. அந்த வெயில் காலத்திலும் உடல் நடுங்கியது. தெனாலி கமலஹாஸன் போல் பயம் பற்றிக்கொண்டது. சென்னை consulateல் IMFல் வேலை தேடுவேன் என்று சொல்லி விசா நிராகரிக்கப்பட்டது
நினைவுக்கு வந்தது. அந்த consulate officerஐ மானசீகமாக நினைத்து 'பார், என்
இலக்கை நெருங்கிவிட்டேன்' என்று மமதையுடன்ஒரு look விட்டேன். கையில்
இருக்கும் MBA பையை இன்னும்
இறுக்கப்பிடித்துக்கொண்டே அந்த IMF
என்ற
தங்க எழுத்துக்களை ஒரு நீண்ட நாவலைப்படிப்பதைப்போல் பார்த்துக்கொண்டிருக்கையில்
மறுபடியும் தெனாலி கமலஹாஸனான என்னை
'க்யா சாஹியே' என்ற மலையாளம் தொனிக்கும் ஹிந்தி வார்த்தைகள்
யதார்த்தத்திற்கு இழுத்து வந்தன.
IMF 05:
மெதுவாகத்திரும்பிய
என்னை
கருப்பர்அல்லாத
கருத்த நிறம் கொண்ட ஒருவர் நீல நிற சீருடை உடுத்தி கண்களால் என்னை நிறுத்தாமல்
நிறுத்தி கேளவிகள் கேட்க ஆயத்தமானார்.
நேராக
அந்த அகல விரிந்த படிகளை ஏறி வானளாவி நிற்கும் அந்த சொர்க்கவாசலைத்திறந்து, பழகி வைத்திருந்த அந்த புன்சிரிப்பை
உதிர்த்து வலது கையை நீட்டி[ks1] என்னை அந்தAmerican accentல் 'I am Kumar ஸ்வாமிநேதன், I have an MBA from .....என்று கூற நினைத்தால்... இவர் யாரு பசவங்குடி நந்தி மாதிரி என்று
யோசிக்க ஆரம்பித்து ஒரு கணத்தில் திரட்டி வைத்திருந்த confidence எல்லாம தவிடு பொடியாகி 'கிடைக்காது, குடுக்க
மாட்டான், ஏன் குடுக்கணும்னு தருமியாகி
அரற்றிக்கொண்டிருந்த சமயத்தில் என் தோளைத் தொட்டது சிவனும் இல்லை, சிவாஜியும் இல்லை. நம் சேர நாட்டு மலையாள Gate Keeper! 'Dont stand here' என்று அவருக்கு
சொல்லிக்கொடுத்த கட்டளைகளைச்சொல்லி என்னை அப்புறப்படுத்த ஆயத்தமானார். சென்னை consulate officer என்னைப்பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்.
IMF 06:
அவரிடம்
பம்மிக்கொண்டே 'வேலைக்கு Applicaion குடுக்க வந்தேன்.'
'அப்பிடியெல்லாம் இந்தியா
மாதிரி எங்க வேண எப்பவேணா நுழைஞ்சு யார வேணா பாத்துட முடியாது. Appointment இருந்தாத்தான் உள்ள போக
முடியும்'
இவர்
என்னவோ ஆகசத்துலேருந்து நேர குதிச்சா மாதிரி ...
முகம்
கருத்து, கண்கள் ஒளியிழந்து, தொனியில் வருத்தம் தெரிந்திருக்க வேண்டும்
அவருக்கு.
இறங்கி வந்து,
"சேட்டா, இங்க எல்லாம் யாரையானும்
தெரிஞ்சாத்தான் உள்ள நுழைய முடியும்.நிறைய
Indians வேலை பாக்கறாங்க இங்க. எல்லோரும் politicians, Finance Ministry officials, IFS OFFICERS, Reserve
Bank officers அவங்களோட
சொந்தக்காரங்க தான். அதனல யாரானும் influence புடிச்சு வர்ற வழியைப்பாரு'
ன்னு
அறிவுறுத்தி அடுத்த MBAவிடம் 'க்யா சாஹியே' என
வினவப்போனார்
நான்
விரக்தியை விரட்டியடிக்க ஆபரஹாம் லிங்கன் statueவை நோக்கி நகர ஆரம்பித்தேன்.
........முற்றும்.
No comments:
Post a Comment