Thursday, May 16, 2013


Fusion Woman: 
பழமையும் புதுமையும் கலந்துவைத்தக் கலவை இவள்!
A tribute to my Aunt on her 77th Wedding Anniversary

கடுகு வெடித்தாலும்
சீரகம் சீறினாலும்
மிளகு கமறினாலும்
கவனம் மட்டும் சிதறாது

ஸ்ருதி சேராததையும்
தாளம் தப்பியதையும்
குரல் கம்மியதையும்
வார்த்தை குழறியதையும்
காப்பி கொடுக்கும் சாக்கில்
காதுபட கூறியே
அன்றைய சாதகத்திற்கு அவரை
அந்தஷணமே  ம்ங்களம் பாட வைப்பாள்!

கைபேசி பேச மாட்டாள்
தொலைபேசி தொட மாட்டாள் (Speaker Phone வேண்டும்)
கணிணி பக்கம் போக மாட்டாள்
Email பார்க்க மாட்டாள்
முகப்புத்தகம் நோக்க மாட்டாள்
Text Message  அனுப்ப மாட்டாள்ஆனால்
அனைத்தயும் அவருக்கு outsource செய்திடுவாள்!

அளவளாவிக்கொண்டே
அளவு ஏதும் பார்க்காமல்
கைய்யால் அள்ளிப்போட்டே
அமுதினும் இனிய அறுசுவை ஆக்குவாள்ஆனால்
செய்முறையோ அளவுமுறையோ கேட்டால் கைவிரிப்பாள்

இனிக்கும் பாகல்
பிஞ்சு அவரை
முதல் decoction காபி
சுண்டக் காய்ச்சிய பால்
‘More, More’ என கேட்கத்தூண்டும் மோர்ஆனால்
அனைத்தும் அவருக்கே முதலில் என்பாள்!

கரி அடுப்பாகட்டும்
விறகடுப்பாகட்டும்
வரட்டிச் சூடாகட்டும் - ஆயினும்
கடுப்பாகாமல் கல்யாண சமையல் கலாய்ப்பாள்!

அவளா இவள் என கேட்கும் அளவிற்கு
அமெரிக்காவில் oven சமையல்
Micro வில் Macro சாகசம் - ஆனால்
பழங்கறியும், எரிச்ச கறியும்
மாறாத  தினப்படி
Menu  Item  ஆகி விட்டது

இவள் ஆளுகையில்
படையல் மனிதருக்கு
பட்டினி படைத்தவனுக்கு!

மொத்தத்தில் இவள்
பழமையும் புதுமையும் சேர்ந்த Fusion
யாருக்கும் வேண்டாம் அதில் Confusion!

அன்புடன்
குமார்

No comments: